×

தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை


வேலூர்: தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, பெரியார் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட திமுக அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதில் ஏராளமான திமுகவினர் சமூக நீதி உறுதிமொழி ஏற்றனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம். மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து – மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர். தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது.

பெண் விடுதலைக்காகவும் சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Periyar ,CM ,G.K. ,Stalin ,Vellore ,Vellore Local Development Office ,B.C. ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...