×

மெக்சிகோவை கலக்கி வந்த போதை கும்பல் தலைவன் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

மெக்சிகோ: மெக்சிகோவில் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்த சர்வதேச போதை கடத்தல் கும்பல் தலைவனின் மகனான ஒவிடியோ கஸ்மேன் லோபஸ் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டான். அமெரிக்காவின் பக்கத்து நாடான மெக்சிகோவின் சினாலோவா மாகாணத்தில் போதை பொருள் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. அங்கு தனி செல்வாக்குடன் உள்ள போதை கடத்தல் கும்பலுக்கும் போலீசுக்கும் அடிக்கடி மோதல் நடக்கும். மெக்சிகோவை கலக்கி வந்த போதை கடத்தல் கும்பல் தலைவன் ஜோகின் ‘எல் சாப்போ’ கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டான். அவனுடன் கைது செய்யப்பட்ட எல் சாப்போவின் சகோதரர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. எல் சாப்போ மற்றும் அவனுடைய சகோதரர்கள் கைது செய்யப்பட்டாலும், போதை பொருள் கடத்தும் கும்பல்களின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்தது.எல் சாப்போவின் மகனான ஒவிடியோ கஸ்மேன் லோபஸை கடந்த ஜனவரி மாதம் போலீசாரும் ராணுவமும் சேர்ந்து நடத்திய வேட்டையில் கைது செய்தனர். இந்த நடவடிக்கையின் போது 10 ராணுவ வீரர்கள் உட்பட 30 பேர் பலியாயினர்.இந்நிலையில், ஒவிடியோ கஸ்மேன் லோபஸை நேற்று மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டான்.அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்ளில் லோபஸ் மீது போதை கடத்தல் வழக்கு உள்ளன.

The post மெக்சிகோவை கலக்கி வந்த போதை கும்பல் தலைவன் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் appeared first on Dinakaran.

Tags : US Mexico ,Ovidio Guzman Lopez ,Mexico ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...