×

நியூசிலாந்துக்கு எதிராக தொடரை வென்றது இங்கிலாந்து

லண்டன்: நியூசிலாந்து அணியுடன் நடந்த 4வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 100 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 311 ரன் குவித்தது. தொடக்க வீரர் டேவிட் மலான் 127 ரன் (114 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். நியூசி. பந்துவீச்சில் ரச்சின் ரவிந்த்ரா 4, மேட் ஹென்றி, டேரில் மிட்செல் தலா 2, ஜேமிசன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 38.2 ஓவரில் 211 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரச்சின் ரவிந்த்ரா 61, நிகோல்ஸ் 41, பிலிப்ஸ் 25, வில் யங் 24 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இங்கிலாந்து பந்துவீச்சில் மொயீன் அலி 4, வில்லி, கார்ஸ், சாம், லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 100 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை டேவிட் மலான் தட்டிச் சென்றார்.

The post நியூசிலாந்துக்கு எதிராக தொடரை வென்றது இங்கிலாந்து appeared first on Dinakaran.

Tags : England ,New Zealand ,London ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது...