×

வினாத்தாளை கசிய விட்ட தேர்வாணைய உறுப்பினர் கைது

புதுடெல்லி: ராஜஸ்தானில் முதுநிலை ஆசிரியர் கிரேடு-2 பணியிடங்களுக்கான தேர்வு சென்ற ஆண்டு டிசம்பரில் நடந்தது. அப்போது பொது அறிவு வினாத்தாள் முறைகேடாக கசிந்ததாக தகவல் பரவியது. இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் வினாத்தாளை கசிய விட்டதாக தேர்வாணைய உறுப்பினர் பாபுலால் கட்டாராவை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த அனில் குமார் மீனா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அவர்களை அமலாக்கத்துறை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது. தேர்வர்களிடமிருந்து தலா ரூ. 8 முதல் 10 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் வினாத்தாளை கசிய விட்டதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்தது.

The post வினாத்தாளை கசிய விட்ட தேர்வாணைய உறுப்பினர் கைது appeared first on Dinakaran.

Tags : Questiture ,New Delhi ,Rajasthan ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...