×

கூடங்குளம் அருகே வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

கூடங்குளம்,செப்.17: கூடங்குளம் அருகே கூத்தங்குழி கிராமத்தில் உள்ள தூய வளன் துவக்கப்பள்ளியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. சபாநாயகர் அப்பாவு, முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு ஊட்டச்சத்து கிப்ட் பாக்ஸ், நோயாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். இந்த முகாமில் பொதுமக்களுக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் வள்ளியூர் வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன், நெல்லை மாவட்ட பஞ். தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, நாங்குநேரி ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், பஞ். தலைவர்கள் கூத்தங்குழி சேசு வளர்மதி, நவ்வலடி ராதிகா சரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் இசக்கி பாபு, ஜேசுராஜ், மாவட்ட பிரதிநிதி முரளி, தோமையார்புரம் ரீகன், சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் ஏசுதாஸ், முன்னாள் கவுன்சிலர் கூத்தங்குழி பாப் டீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கூடங்குளம் அருகே வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Kudankulam ,Thuya Valan Primary School ,Koodanguzhi ,
× RELATED ஆடு திருடிய வாலிபர் கைது