×

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் 176 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில போலீஸ் அறிவிப்பு

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் 176 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில போலீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.8 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 3ம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மணிப்பூர் அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விபரங்களை மணிப்பூர் மாநில போலீசார் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இந்த வன்முறை சம்பவத்தில் 176 பேர் உயிரிழந்துள்ளதாக மணிப்பூர் மாநில போலீசார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.8 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.

மேலும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக 9,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் கலவரம் தொடங்கி 4 மாதங்கள் அன நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க மணிப்பூர் மாநில அரசு தற்போது முன் வந்துள்ளது.

The post மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் 176 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில போலீஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 70 வீடு,...