×

பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நிறைவேற்றுகிறார் திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை, செப்.16: பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நிறைவேற்றுகிறார் என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார். திருவண்ணாமலை ஒன்றியம், தச்சம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நேற்று கலைஞர் மகளிர் உரிமை தொைக வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணிகலைமணி, துணை தலைவர் த.ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்டிஓ பிரியதர்ஷினி வரவேற்றார். விழாவில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:

பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். திமுக ஆட்சி காலங்களில் தான் பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் கொரோனா காலத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ₹4 ஆயிரம், மகளிர் குழுக்கள் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிகட்சி ஆட்சியில் தான் உலகத்திலேயே முதன்முதலாக பெண்களுக்கு வாக்குறுமை வழங்கப்பட்டது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை முதன்முதலில் வழங்கிவர் கலைஞர். காவல்துறையில் பெண்கள் பணியாற்றும் வாய்ப்பை அளித்ததும், காவல்துறைக்கு தலைவராக லத்திகாசரணை நியமித்ததும் கலைஞர்தான். உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கலைஞர் அளித்தார்.

மாநகராட்சி முதல் கிராம ஊராட்சிகள் வரை பெண்கள் உள்ளாட்சி பதவிகளை வகிக்கின்றனர். தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதை போல கலைஞரின் எண்ணங்களை ஈடுடேற்றுவதற்காக அயராது உழைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்கள் உயர்கல்வி படிக்க மாதம் ₹1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் வழங்கினார். வீட்டு வேலைகளை செய்து அதிகாலை தொடங்கி அயராது உழைத்து தன் குழந்தைகளை படிக்க வைக்கும் ஏழைத்தாய்மார்கள் உள்ளனர். வீடுகளில் உழைக்கும் பெண்களின் உழைப்பை அவர்களுடைய பெற்றோர், சகோதரர்கள், கணவன் ஆகியோர் கூட அங்கீகரிப்பதில்லை.

ஆனால், பெண்களின் உழைப்பை மதித்து அவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 உரிமை தொகையை முதல்வர் வழங்கியிருக்கிறார். பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தாய் உள்ளத்தோடு காலை உணவு திட்டத்தை முதல்வர் தொடங்கி ைவத்ததும், பெண்களின் துயரை போக்குவதற்காகத்தான். இது, பெண்களின் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றுகிற ஆட்சி. எனவே, நாம் முதல்வருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்.
குடும்பத்தை நடத்த இந்த ஆயிரம் ரூபாய் உதவியாக இருக்கும் என்ற நிலையில் இருக்கிற அனைத்து பெண்களுக்கும் நிச்சயம் உரிமைத்தொகை கிடைக்கும். அதனால்தான் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு உரமைத்தொகையை முதல்வர் வழங்கியிருக்கிறார். எனவே, தகுதி இருந்தும் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். ஒரு மாதத்துக்குள் மேல்முறையீடு செய்தால் தகுதியானவர்களுக்கு கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில் மாநில தடகளச்சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், கூடுதல் கலெக்டர் ரிஷப், முன்னாள் எம்பி வேணுகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.தரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், கே,ஆர்.சீதாபதி, நகராட்சி தலைவர் நிர்மலாவேல்மாறன், ஆர்.சிவானந்தம், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் துரை.வெங்கட், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பிரவீன்தரன், ஒன்றிய செயலாளர்கள் மெய்யூர் சந்திரன், கோவிந்தன், ராமஜெயம், ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் எம்.ஆர்.கலைமணி, விளையாட்டு மேம்பாட்டு அணி பெரணம்பாக்கம் மணிகண்டன், ஒன்றிய குழு தலைவர்கள் தண்டராம்பட்டு பரிமளா கலையரசன், புதுப்பாளையம் சுத்தரபாண்டியன், கலசபாக்கம் அன்பரசி ராஜசேகர், கனிமொழி சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நிறைவேற்றுகிறார் திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Minister ,AV ,Velu ,Tiruvannamalai Union ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...