×

கும்பகோணத்தில் விஸ்வரூப ஆஞ்சநேருக்கு 501 கிலோ துளசியால் இயந்திர வடிவில் சிறப்பு அலங்காரம்

 

கும்பகோணம்,செப்.16: கும்பகோணம் பழைய பாலக்கரை காமராஜ் நகரில் அமைந்துள்ள விஸ்வரூப ஜெயமாருதி சன்னிதானத்தில் நேற்று முன்தினம் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு 11 அடி உயரம் கொண்ட ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 501 கிலோ எடை கொண்ட துளசியால் எந்திர வடிவில் சிறப்பு துளசி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனைத்தொடர்ந்து மழை வேண்டியும், டெங்கு போன்ற கொடிய நோய்த்தொற்று பரவாமல் தடுக்க வேண்டியும், விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் நோய்நொடியின்றி சுகம் பெற வேண்டியும், சிறப்பு பிரார்த்தனையுடன் ஆஞ்சநேயருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, திரிசிதி அர்ச்சனை நடைபெற்று, விசேஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஸ்வரூப ஜெயமாருதி சன்னிதானத்தின் நிர்வாகிகள் ராமன் பட்டர், மோகன் பட்டர், பாலாஜி பட்டர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post கும்பகோணத்தில் விஸ்வரூப ஆஞ்சநேருக்கு 501 கிலோ துளசியால் இயந்திர வடிவில் சிறப்பு அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Vishwarupa Anjaner ,Kumbakonam ,Vishvarupa ,Jayamaruthi ,Sannithanam ,Balakarai Kamaraj Nagar ,
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...