×

குடுமியான்மலை வேளாண் கல்லூரியில் கேலிவதை, போதைப்பொருள் விழிப்புணர்வு

 

விராலிமலை, செப்.16:குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு கேலிவதை மற்றும் போதைப் பொருள் பாவனை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று நடைபெற்றது. நிகழ்விற்கு இலுப்பூர் கோட்ட துணை கண்காணிப்பாளர் காயத்ரி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் நக்கீரன் வரவேற்றார். கல்லூரியின் பேராசிரியர்கள் முனைவர் இந்துமதி, முனைவர் பால் செபாஸ்டியன், முனைவர் விஜயகுமார் ஆகியோர் கேலிவதை குறித்த தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களையும் அதை எதிர்கொண்ட விதங்களையும் மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டனர்.

இதில் துணை கண்காணிப்பாளர் காயத்ரி பேசுகையில், கேலி வதை என்றால் என்ன என்பது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கேலி வதை செய்வதன் விளைவுகள் குறித்தும், மாணவர் மற்றொரு மாணவனை கேலி வதை செய்தால் அவர் தண்டனைக்கு உள்ளாகும் சட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். அன்னவாசல் காவல் துணை ஆய்வாளர் ராமச்சந்திரன் போதைப்பொருள் பாவனை குறித்து விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தினார். இதில் மாணவர்களுக்கு எளிய வகையில் புரியும் விதமாக கதைகளின் மூலம் போதை பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் இதில் உள்ள சட்ட திட்டங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். முடிவில் டாக்டர். ஜெயராணி நன்றி கூறினார்.

The post குடுமியான்மலை வேளாண் கல்லூரியில் கேலிவதை, போதைப்பொருள் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Kudumianmalai Agricultural College ,Viralimalai ,Research Institute ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை...