×

சீர்காழியில் 15வது வார்டில் கொசு மருந்து அடிக்க கோரிக்கை

 

சீர்காழி, செப்.16: சீர்காழி நகராட்சி 15வது வார்டு பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு குழு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை வைத்தார். நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், நகரமைப்பு ஆய்வாளர் மரகதம், கவுன்சிலர் பாஸ்கரன், கயிறு கடை பாபு முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர் சுவாமிநாதன் வரவேற்று பேசினார். கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். குப்பைகள் தேக்கமின்றி அகற்ற வேண்டும். கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சீர்காழியில் 15வது வார்டில் கொசு மருந்து அடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை