
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: காவிரி தண்ணீர் உத்தரவாதமில்லாத நிலையில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளையும் துவக்க தயக்கம் காட்டி வருகின்றனர். குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டு, சம்பா சாகுபடியும் இந்த ஆண்டு இல்லையென்றால் விவசாயிகள் மட்டுமல்லாமல் டெல்டா மாவட்ட பொருளாதாராமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 20ம்தேதி காவிரி டெல்டா மாவட்டம் முழுவதும் காவிரி படுகைப் பாதுகாப்பு கூட்டு இயக்கம் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபடுவதென்று அறிவித்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவிக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பற்றாக்குறை கால பகிர்வு அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு அரசு குறுவை பயிர் கருகி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35,000 இழப்பீடு வழங்கி விவசாயிகளை பாதுகாக்க முன்வரவேண்டும்.
The post விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.