×

ஆன்லைன் ரம்மி வழக்கு 18ம் தேதி விசாரணை

புதுடெல்லி: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில் முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

The post ஆன்லைன் ரம்மி வழக்கு 18ம் தேதி விசாரணை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட...