×

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ஓரிரு மாதங்களில் ககன்யான் சோதனை: இஸ்ரோ தகவல்

பெங்களூரு: சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 வெற்றியை தொடர்ந்து, விண்ணுக்கு மனிதனை அனுப்பும் சோதனையில் ஆர்வம் காட்டிவரும் இஸ்ரோ, ககன்யான்-1 திட்ட பரிசோதனையை இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் மேற்கொள்ளவுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள இஸ்ரோ அதிகாரி ஒருவர், ககன்யான் திட்டத்தில் முதலில் முதல் சோதனை வாகனம் டிவி-டி1, அதன்பின்னர் 2வது சோதனை வாகனம் டிவி-டி2 விண்ணில் செலுத்தப்படும்.

அவை வெற்றி பெற்றபின் ஆளில்லா விண்கலம் எல்விஎம்3-ஜி1 மூலம் செலுத்தப்படும். ககன்யான் சோதனை இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செய்யப்படும் என்று இஸ்ரோ அதிகாரி தெரிவித்துள்ளார். பூமியிலிருந்து 400 கிமீ தொலைவில் புவிவட்ட பாதைக்கு 2-3 நபர்களை அனுப்பி, விண்ணில் அவர்களை 2-3 நாட்கள் தங்கவைத்து, பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவந்து, இஸ்ரோவின் செயல்திறனை உலகிற்கு காட்டுவதே கங்கன்யான் திட்டத்தின் நோக்கம் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ஓரிரு மாதங்களில் ககன்யான் சோதனை: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Bengaluru ,Kaganyan ,Dinakaran ,
× RELATED ககன்யான் திட்டத்துக்கான 3ம் கட்ட சோதனை வெற்றி