×

டாக்டரின் மருந்து சீட் இல்லாமல் மாத்திரை விற்கும் கடைகளில் சோதனை : கோயம்பேடு வியாபாரிகள் கோரிக்கை

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழம், பூ மற்றும் உணவு தானிய அங்காடிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, திண்டுக்கல், அரியலூர், வேலூர், சென்னை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அதிகாலையில் மூட்டை தூக்குவதற்கு சோர்வாக இருப்பதால் கோயம்பேடு மார்க்கெட் அருகேயுள்ள மெடிக்கல்ஷாப்பில் மருத்துவரின் சீட் இல்லாமல் தினமும் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால், 4 மணி நேரம் உடல் வலி இல்லாமல் வேலை செய்வதாகவும் 4 மணி நேரம் கழித்து உடலில் சோர்வு ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூறும்போது, “கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் மூட்டை தூக்குவதால் பயங்கர உடல் வலி ஏற்படுகிறது. இதை போக்க அருகில் உள்ள மெடிக்கல்ஷாப்பில் 20 ரூபாய் கொடுத்தால் போதும், வலி நிவாரணி மாத்திரைகள் கொடுப்பார்கள். மாத்திரை போட்டால் 4 மணி நேரம் உடம்பு வலி இருக்காது. சுறுசுறுப்பாக வேலை செய்யலாம். 4 மணி நேரம் கழித்து உடல் சோர்வு ஏற்படும். வலி நிவாரணி மாத்திரைகளை தினமும் பயன்படுத்தினால்தான் எங்களால் மூட்டைகளை தூக்க முடியும்” என்றனர்.வியாபாரிகள் கூறும்போது,”கோயம்பேடு மார்க்கெட் அருகேயுள்ள மெடிக்கல் ஷாப்பில் 20 ரூபாய்க்கு வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்கிறார்கள். மருத்துவர் சீட் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்வதால் தினமும் கூலி தொழிலாளர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மெடிக்கல்ஷாப்பில் வலி நிவாரணி மாத்திரை வாங்கி பயன்படுத்துவதால் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவர் சீட் மற்றும் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யும் மெடிக்கல் ஷாப்பில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.மருத்துவர்களிடம் கேட்டபோது,”மெடிக்கல்ஷாப்பில் வலி நிவாரணி மாத்திரைகளுடன் 3 வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை தினமும் பயன்படுத்தினால் கிட்னியில் பாதிப்பு ஏற்படும். நரம்புகள் பாதிக்கப்படும். எனவே, மருத்துவரின் ஆலோசனை மற்றும் மருந்து சீட் இல்லாமல் எந்த ஒரு மாத்திரைகளையும் பயன்படுத்த வேண்டாம்” என்றனர்.

The post டாக்டரின் மருந்து சீட் இல்லாமல் மாத்திரை விற்கும் கடைகளில் சோதனை : கோயம்பேடு வியாபாரிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Coimbade ,Annagar ,Chennai ,Coimbade Market ,Andhra Pradesh ,Coimbadu ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...