×

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பஞ்சர் ஓட்டும் கடையில் ஏர்கம்பிரஷர் வெடித்து 4 பேர் படுகாயம்..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பஞ்சர் ஓட்டும் கடையில் ஏர்கம்பிரஷர் வெடித்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி எதிரே லத்தின் என்பவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லிங்கப்பா, முத்து ஆகியோர் லாரி ஓட்டி வந்துள்ளனர். அப்போது லாரி டயர்களுக்கு பஞ்சர் ஓட்டும் போது ஏர்கம்பிரஷர் வெடித்ததில் 4 பேர் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் 4 பேருக்கும் கை, கால்களில் முறிவு ஏற்பட்டு உடனடியாக அவர்களை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மீட்டு ஓசூர் அரசு மத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லிங்கப்பா, முத்து ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், லத்தின், முருகன் ஆகிய இருவரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பஞ்சர் ஓட்டும் கடையில் ஏர்கம்பிரஷர் வெடித்து 4 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri District Osur ,Punchur shop ,Krishnagiri District ,Krishnagiri ,Osur ,Puncher Shop ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டு தொலைபேசி அழைப்பை...