×

இந்தியாவை மீட்கும் வேட்கை தீ பரவட்டும் நாடெங்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை:கடமை ஆற்ற கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நாடாளுமன்ற களம் காண்போம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: அறிவியக்கமாம் திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்து என்றும் தமிழ்நாட்டை ஆளும் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்.

தன் அறிவுத்திறத்தால் தமிழினத்தை பண்படுத்திய பேரறிஞர் காட்டிய பாதையில், கடமை ஆற்ற கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நாடாளுமன்ற களம் காண்போம். எண்ணித்துணிவோம். இந்தியாவை மீட்கும் வேட்கை தீ பரவட்டும் நாடெங்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் குறிப்பு எழுதி கையொப்பமிட்டார்

The post இந்தியாவை மீட்கும் வேட்கை தீ பரவட்டும் நாடெங்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட் appeared first on Dinakaran.

Tags : India ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,Dinakaran ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்