- அமெரிக்க ஜனாதிபதி
- ஜோசபின்
- வாஷிங்டன்
- டெலாவேர்
- எங்களுக்கு
- ஜனாதிபதி
- ஜோ பிடன்
- ஹண்டர் பிடன்
- அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன்
- தின மலர்
வாஷிங்டன் : உண்மையை மறைத்து ஆயுதம் வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோபிடனின் மகன் ஹண்டர் பிடன் மீது டெலாவர் நீதிமன்றத்தில் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஜோபிடனின் மகன்களில் ஒருவரான ஹண்டர் பிடன் கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் வரி முறைகேடு செய்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்க சட்டத்தின் படி போதைப் பொருட்களை வைத்திருக்கும் ஒருவர், துப்பாக்கி வைத்திருக்க முடியாது. ஆனால் ஹண்டர் துப்பாக்கி வாங்கும் போது போதைப் பொருள் பயன்படுத்துவதை மறைத்ததாகவும் பின்னர் ஒப்புக் கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவை டெலாவரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஹண்டர் பிடனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதம் வாங்குவதற்காக போலியான தகவல்களை அளித்தது உள்ளிட்ட 3 கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹண்டர் பிடன் மீது ஏற்கனவே வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ள ஜோபிடனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் தற்போது வரை பதவியில் இருக்கும் அதிபரின் வாரிசுகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டது இல்லை என்பதால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
The post உண்மையை மறைத்து ஆயுதம் வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோபிடனின் மகன் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு!! appeared first on Dinakaran.