×

பேபி சன் என அழைக்கும் நாசா… பிரபஞ்சத்தில் சூரியன் போன்று பிறந்த புதிய நட்சத்திரம்..!!

வாஷிங்டன்: நமது சூரியன் போன்ற நட்சத்திரம் பிறந்திருப்பதை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம் எடுத்துள்ளது. பிரபஞ்ச ரகசியத்தை அறிய கடந்த 2023-ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பியது. அப்போது முதல் சூரிய குடும்பத்திற்கு வெளியே வெகு தொலைவில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி துல்லியமாக படம் பிடித்து தொடர்ந்து பூமிக்கு அனுப்பி வைத்து வருகிறது.

இந்நிலையில், ஒரு புதிய நட்சத்திரம் பிறந்திருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அடையாளம் கண்டு அதன் புகைபடத்தை தற்போது அனுப்பி நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. பிறந்த சில ஆயிரம் ஆண்டுகளான இந்த நட்சத்திரம் அதிக நிறை கொண்டதாகவும் துருவ பகுதியில் இருந்து சூடான காற்றை வெளியிட்டு வருவதாகவும், புகைப்படத்தை வைத்து ஆய்வு முடிவு வெளியிட்டுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

இந்த நட்சத்திரம் முதுமையாக உருவான பின் நமது சூரியனை போன்ற தோற்றம் கொண்டதாக இருக்கும் என்றும், சூரியன் பிறகும் போது எப்படி இருந்ததோ அதை போன்ற வடிவத்தில் இந்த நட்சத்திரம் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த நட்சத்திரத்திற்கு பேபி சன் என விஞ்ஞானிகள் பெயரிட்டு இருக்கிறார்கள்.

The post பேபி சன் என அழைக்கும் நாசா… பிரபஞ்சத்தில் சூரியன் போன்று பிறந்த புதிய நட்சத்திரம்..!! appeared first on Dinakaran.

Tags : NASA ,Washington ,James ,Webb ,Telescope ,
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்