×

காஞ்சி மாநகராட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

காஞ்சிபுரம்: காஞ்சி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வரலாற்றுப் பெருமை வாய்ந்த காஞ்சிபுரம் மண்ணில் பிறந்து தனது அடுக்கு மொழி பேச்சாற்றலாலும், எழுத்தாற்றலாலும், அறிவாற்றலாலும் தமிழக மக்களை கவர்ந்த மாபெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா. இவரின் பிறந்தநாள் செப்டம்பர் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.

அதன்படி பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை ஒட்டி அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெறும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளார். இதேபோல் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

The post காஞ்சி மாநகராட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Anna ,Kanchi Municipal Office ,stalin ,Kanchipuram ,Kanji Municipal Office ,G.K. ,BC ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…