×

மணப்பாடு திருச்சிலுவை திருத்தல மகிமைப் பெருந்திருவிழா திரளானோருக்கு திருச்சிலுவை ஆசீர் வழங்கப்பட்டது

உடன்குடி, செப். 15: மணப்பாடு திருச்சிலுவை திருத்தலத்தின் 444வது மகிமை பெருந்திருவிழாவில் திரண்ட இறை மக்களுக்கு திருச்சிலுவை ஆசீர் வழங்கப்பட்டது. தென்தமிழகத்தின் பிரசித்திப் பெற்ற திருத்தலங்களில் ஒன்று, மணப்பாடு திருச்சிலுவை ஆலயம். 3 பக்கம் கடல் சூழ்ந்து மணல் குன்றின் மீது அமைந்துள்ள இத்திருத்தலத்தின் 444வது மகிமை பெருந்திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் முதல் செப்.12ம் தேதி வரை காலை 6.30 மணிக்கு திருப்பலி, 13ம் தேதி காலை 6.30 மணி திருப்பலி, 5 திருக்காய சபையின் பொறுப்பாளர்கள் தேர்வு, மாலை 4.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் மலையாளத் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகைக்கு வரவேற்பு, இரவு 7 மணிக்கு ஆயர் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடந்தது.

இதில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு பங்கு ஆலயம் மற்றும் திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலி, காலை 5 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் மலையாளத்தில் திருப்பலி, காலை 6 மணிக்கு திருத்தலத்தைச் சுற்றி திவ்ய 5 திருக்காய சபையினர் பவனி, ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் பெருவிழா திருப்பலி, ஐந்து திருக்காய சபையின் பொறுப்பாளர்கள் நியமனம், மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடைபெற்றது. காலை 11 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலி, மாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல், மாலை 5.30 மணிக்கு கொடியிறக்கம், நன்றி திருப்பலி நடந்தது. இன்று(15ம் தேதி ) புனித வியாகுல அன்னை திருவிழாவையொட்டி காலை 5 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலி நடக்கிறது. ஏற்பாடுகளை அருட்பணியாளர்கள், புனித யாகப்பர் ஆலய நலக்கமிட்டி, மணப்பாடு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

The post மணப்பாடு திருச்சிலுவை திருத்தல மகிமைப் பெருந்திருவிழா திரளானோருக்கு திருச்சிலுவை ஆசீர் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Manapadu ,Trichiluai ,Thirthala Makhimai Perundruvizha ,Tiruchiluai Asir ,Udengudi ,Trichiluva Asir ,Maghimi Perundruvija ,Manapadu Trichiluva Temple.… ,Trichiluva ,Asir ,Manapadu Trichiluva ,Tridulam ,Mahimai Perundruvizha ,
× RELATED குலசேகரன்பட்டினம், மணப்பாடு பகுதியில் புதிய மின்மாற்றிகள் திறப்பு