×

மண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்

சமயபுரம், செப்.15: மண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு மண்ணச்சநல்லூர் ஒன்றியக்குழு தலைவா் தர் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கார்த்திகேயன் முன்னிலை வகித்தாா். இந்த கூட்டத்தில் ஒன்றியகுழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தில் கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் தங்களது பகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர். குடிநீா்க் குழாய்களை மேம்படுத்தல், ஊராட்சி ஒன்றியத்துக்கு வருவாய் ஏற்படும் வகையில் பயன்படுத்துதல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பலர் கலந்து கொண்டனா்.

 

The post மண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Mannachanallur ,Samayapuram ,Mannachanallur Union Committee ,Panchayat ,Union ,Dinakaran ,