×

பேரிகை அரசு பள்ளிக்கு 50 ேஜாடி பெஞ்ச், டெஸ்க்

ஓசூர், செப்.15: ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரிகை அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் மற்றும் பெஞ்ச் டெஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு, 50 ஜோடி பெஞ்ச், டெஸ்க் மற்றும் 185 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிகள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நாகேஷ், ஊராட்சி மன்ற தலைவர் பிரவீன்குமார், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணிகண்டன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சொன்னோ கவுடு, திமுக நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post பேரிகை அரசு பள்ளிக்கு 50 ேஜாடி பெஞ்ச், டெஸ்க் appeared first on Dinakaran.

Tags : Barikai Govt School ,Parikai Government High School ,Assembly Constituency ,Tamil Nadu government ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி...