×

சரக விளையாட்டு போட்டியில் அதியமான் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

தர்மபுரி, செப்.15: தர்மபுரி சரக அளவிலான விளையாட்டு போட்டிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில், 90 மாணவர்கள் பங்கேற்று, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்றனர். இதே போல், ரன்னர் பிரிவில் 50 மாணவர்களும் வெற்றி பெற்று, அதியமான் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஷாவலி உள்ளிட்ட ஆசிரியர்களையும், சரக விளையாட்டு போட்டியின் சரக செயலாளரும், பள்ளி தலைமையாசிரியருமான தங்கவேல் பாராட்டினார்.

The post சரக விளையாட்டு போட்டியில் அதியமான் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Adhiyaman Government School ,Sarakana Sports tournament ,Darmapuri ,Darmapuri Sang-level Games ,Playground ,Government of Darmapuri Athiyaman ,Sari Sports ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...