×

உசிலம்பட்டியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

உசிலம்பட்டி, செப். 15: உசிலம்பட்டி நகர் பகுதியில் மதுரை- தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக உசிலம்பட்டி புதிய பஸ் நிலையம் அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற வைகை- சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி அருகிலுள்ள கண்மாய் பகுதிக்குள் சென்று வருகிறது.

உசிலம்பட்டி வழியாக சேடபட்டி வரை செல்லும் இந்த பிரதான குழாயில் உடைப்பு காரணமாக குறைந்தது 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உசிலம்பட்டி, சேடபட்டி பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உசிலம்பட்டியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் appeared first on Dinakaran.

Tags : Usilampatti ,Madurai-Theni National Highway ,Usilambatti Nagar ,Usilambatti ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை