×

செங்குன்றத்தில் வீடு வீடாக சோதனை குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் அதிரடி கைது


புழல்: செங்குன்றம் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான பாடியநல்லூர், கண்ணம்பாளையம் ஆகிய பகுதிகளில் சமீபத்தில் நான்கு பேர் கொலை செய்யப்பட்டனர். மேலும், பல்வேறு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின்பேரில், செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் செங்குன்றம் காவல் மாவட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு உள்ள நபர்களின் வீட்டுக்கு நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது குற்றவாளிகளின் பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் போலீசார் கூறுகையில், ‘‘குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாலோ, அல்லது குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்தாலோ அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்களும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் பற்றியும், குற்றங்கள் நடைபெறும் இடங்கள் குறித்தும் எங்களுக்கு ரகசியமாக தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரகசியத்தை யாரிடமும் தெரிவிக்க மாட்டோம்.

நீங்கள் தைரியமாக முன்வந்து எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். ரவுடிகள் வேட்டையில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும்,’’ இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த நடவடிக்கையில், செங்குன்றம் உதவி ஆணையர் குமரேசன், செங்குன்றம், சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், மகளிர் காவலர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

The post செங்குன்றத்தில் வீடு வீடாக சோதனை குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Senggunram ,Padiyanallur ,Kannampalayam ,Dinakaran ,
× RELATED பரோலில் வந்தபோது தப்பிய கைதி விசாகப்பட்டினத்தில் சுற்றிவளைப்பு