×

கல்குவாரி வெடிவிபத்தில் 2 பேர் பரிதாப பலி

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே சுந்தரபுரி கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் 50க்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர். நேற்று பாறைகளை உடைப்பதற்காக பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகளில் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் சுந்தரபுரி கிராமத்தைச் சேர்ந்த வேலு என்ற மேத்யூ (55), அரசம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாராயணன் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயத்துடன் திண்டுக்கல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தொழிலாளி ஒருவர் கூறுகையில், ‘‘வெடி விபத்து ஏற்பட்டபோது மற்ற தொழிலாளர்கள் மேட்டுப்பகுதியில் இருந்ததால் உயிர் பலி அதிக அளவில் ஏற்படவில்லை’’ என்றார்.

The post கல்குவாரி வெடிவிபத்தில் 2 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Kalquarie ,Vadamadurai ,Sundarapuri ,Vadamadurai, Dindigul district ,Kalquari ,Dinakaran ,
× RELATED திமுக ஆலோசனைக் கூட்டம்