×

பட்டாபிராம், சேக்காட்டில் ரூ.28.30 கோடியில் புதிய ரயில்வே சுரங்கப்பாதை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

ஆவடி: பட்டாபிராம், சேக்காடு ரூ.28.30 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி ஆவடியை அடுத்து பட்டாபிராம், இந்து கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையே சேக்காடில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் ரயில் பாதையை கடக்க, சிறிய சுரங்கபாதை இருந்தது. அந்த பாதை, மழை காலங்களில் தண்ணீரில் மூழ்கி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில், ரயில் பாதைக்கு கீழே பாதுகாப்பான கீழ்ப்பாலம் எனப்படும் சுரங்கப்பாதை அமைக்க ஒன்றிய, மாநில அரசுகள் முடிவு செய்தது.

அதற்காக ரயில்வே நிர்வாகத்துடன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள், செங்கல்பட்டு கோட்டம் வாயிலாக, ரூ.28.30 கோடி மதிப்பில், புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணி, கடந்த 2019ல் ஜனவரியில் துவங்கி இந்த ஆண்டு பணிகள் நிறைவடைந்தது. அதன்படி, சுரங்கபாதையில் இருசக்கர வாகனம், கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சென்று வரும் வகையில், 13 அடி அகலம், 16 அடி உயரம் கொண்ட இரு வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கான இடத்தில், 262 அடி நீளம் சுரங்க பாதையும், அதன் இரு பக்கத்திலும், தலா 600 அடி நீளத்திற்கு ரயில்வே பாதையை கடப்பதற்கான இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர், தலைமையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தமிழ்நாடு நூல் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் காந்தி, எம்எல்ஏக்கள் அ.கிருஷ்ணசாமி, எஸ்.சந்திரன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் சாந்தி, நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலை தலைமை பொறியாளர் முருகேசன், தலைமை பொறியாளர்கள், கோட்ட பொறியாளர்கள், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர், உதவி பொறியாளர் சேதுராமன்,

ஆவடி மாநகர கழக பொறுப்பாளர் சன்பிரகாஷ் ஆவடி மாநகராட்சியின் மேயர் உதயகுமார் ஆவடி மாநகராட்சி பணி குழு தலைவர் ஆசிம்ராஜா, ஆவடி மாநகர வடக்கு பகுதி திமுக செயலாளர் நாராயண பிரசாத் ஆவடி மேற்கு பகுதி திமுக செயலாளர் பொன் விஜயன், ஆவடி மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜோதிலட்சுமி நாராயண பிரசாத், 37வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் ஆவடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள், மற்றும் ஆவடி மாநகராட்சியின் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாநில அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், திமுக செயல் வீரர்கள் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

The post பட்டாபிராம், சேக்காட்டில் ரூ.28.30 கோடியில் புதிய ரயில்வே சுரங்கப்பாதை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Pattabram ,Aavadi ,Pattabram, Sekkad ,Sekkad ,Dinakaran ,
× RELATED ஆவடி அருகே துப்பாக்கி முனையில் ரூ.1.50...