×

ஆவணி அமாவாசையையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்: அதிகாலை முதலே மலையேறிச் சென்று சாமி தரிசனம்

விருதுநகர்: ஆவணி அமாவாசையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கி இருக்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய சாரை சாரையாக வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு 12-ம் தேதி முதல் நாளை வரை பக்தர்கள் மலையேறி சென்று வழிபாடு செய்ய நான்கு நாட்கள் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இன்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளனர்.

The post ஆவணி அமாவாசையையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்: அதிகாலை முதலே மலையேறிச் சென்று சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Saduragiri ,New Moon ,Sami ,Virudunagar ,Saduragiri Sunderamakalingam ,Aavani ,Amavasa ,Moon ,Sami Vision ,
× RELATED சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி: கோயில் நிர்வாகம்