×

கோடநாடு விவகாரம்!: 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த கனகராஜ் சகோதரர் தனபால் வலியுறுத்தல்

கோவை: கோடநாடு விவகாரம் தொடர்பாக 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த கனகராஜ் சகோதரர் தனபால் வலியுறுத்தியுள்ளார். கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மறைந்த கனகராஜ் சகோதரர் தனபால் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தனபாலுக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். சேலம், நீலகிரி, கோவை, திருப்பூரைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள், காவல் அதிகாரிகள் பட்டியலை சமர்பிக்க உள்ளார். சிபிசிஐடி போலீசாரிடம் தரும் பட்டியலில் உள்ளவர்களை விசாரிக்க தனபால் கோரிக்கை வைக்க உள்ளார்.

கோடநாடு வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக 11வது நபராக தனபால் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். கோடநாடு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தனபால் இபிஎஸ்க்கு எதிராக பேட்டி அளித்திருந்தார். இதனிடையே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் சிபிசிஐடி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராகுவதற்கு முன்பாக ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், பட்டியலில் இடம்பெற்றுள்ள 50 பேர் ஏதேனும் ஒரு வகையில் கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கூறினார். 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த வலியுறுத்தினார். ஜெயலலிதா கார் ஓட்டுனராக இருந்த கனகராஜ் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜை அடித்துக் கொன்றுவிட்டு விபத்து என காட்டியுள்ளனர் என்று சகோதரர் தனபால் குற்றம்சாட்டினார்.

The post கோடநாடு விவகாரம்!: 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த கனகராஜ் சகோதரர் தனபால் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tanapal ,Govai ,Kanagaraj ,Kodanadu ,Kanakaraj ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!