×

நீளமான தலை, ஒவ்வொரு கையிலும் மூன்று விரல்கள்: வேற்றுகிரக மனிதர்கள் என்று நம்பப்படும் 2 மம்மிக்கள் உடல்கள் கண்டுபிடிப்பு..!!

மெக்சிகோ: வேற்றுகிரக மனிதர்களின் உடல்கள் என்று நம்பப்படும் 2 மம்மிகள் மெக்சிகோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருகின்றன. 2017-ம் ஆண்டு பெரு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது விசித்திரமான உருவத்தில் உள்ள பாடம் செய்யப்பட்ட 2 மம்மிகள் கிடைத்தன. உடல்கள் பற்றி கார்பன் டேடிங் உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்ட ஆரய்ச்சியாளர்கள் ஒரு உடல் 1800 ஆண்டுகள் பழமையானது என்றும் மற்றொன்று 700 ஆண்டுகளுக்கு முன்பு பாடம் செய்யப்பட்டது என்பதையும் கண்டறிந்தனர். மனிதர்கள் உருவத்தை விட வித்யாசமாக காணப்படும் இவ்வற்றின் தலை நீளமாகவும், ஒவ்வொரு கையிலும் 3 விரல்கள் இருக்கின்றன.

தற்போது வரை இவை மனிதர்கள் அல்லாத உயிரினங்கள் என்று வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. கடந்த 7 ஆண்டுகளாக இந்த உடல்கள் வேற்று கிரக மனிதர்களின் உடல்களா என கோணத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட வந்தது. இந்நிலையில் மனிதர்கள் அல்லது இந்த உடல்களை தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தும் நோக்கத்தில் மெக்சிகோவுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. 2 மம்மிகளின் மரபணுக்களை ஆய்வு செய்து அவை வேற்றுகிரக வாசிகளுடையதா என்பதை தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் விரைவில் நிரூபிக்க இருக்கிறார்கள். இந்த ஆய்வு வெற்றி பெற்றால் பூமியில் வேற்று கிரகவாசிகளின் உறுப்பை கண்டறிந்த முதல் நாடு என்ற பெருமையை மெக்சிகோ பெறும்.

The post நீளமான தலை, ஒவ்வொரு கையிலும் மூன்று விரல்கள்: வேற்றுகிரக மனிதர்கள் என்று நம்பப்படும் 2 மம்மிக்கள் உடல்கள் கண்டுபிடிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mexico ,Peru ,
× RELATED மெக்சிகோவில் சர்வதேச ஹாட் ஏர் பலூன்...