×

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

அரூர், செப்.14: பாஜ அரசை கண்டித்து அரூரில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 44 பெண்கள் உள்பட 104 பேரை போலீசார் கைது செய்தனர். அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி.வரி விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தீர்க்காத ஒன்றிய அரசை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமரன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் சிற்றரசு, முருகன், சுப்பிரமணி, பரமசிவம், கமலாமூர்த்தி, அல்லிமுத்து, நடராஜன், விஸ்வநாதன், செங்கொடி, ராஜி, பெருமாள், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 44 பெண்கள் உட்பட 104 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் appeared first on Dinakaran.

Tags : Communist Party ,of India ,Arur ,Communist Party of India ,BJP government ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை