மயிலாடுதுறை, செப்.14: மயிலாடுதுறை வட்டாரங்களில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மைங்களிலும். மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமன் மரபு சார் ரகங்கள் பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை, காளி, மணல்மேடு, வில்லியநல்லூர் வேளாண் விரிவாக்க மையங்களில் பாரம்பரிய நெல் ரகங்களான ஆத்தூர் கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாராம்பரிய விதை நெல்கள் 50 சதவீத மான்ய விலையில் கிடைக்கும். ஒரு விவசாயிக்கும் அதிக பட்சம் 20 கிலோ தரப்படும். அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளலாம் என்று வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
The post மயிலாடுதுறையில் மானிய விலையில் நெல் ரகங்கள் appeared first on Dinakaran.
