- கீழவள்ளியூர் சஞ்சீவிமலை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
- Thokaimalai
- சஞ்சீவிமலை
- கீசல்வேலியூர்
- கீசவ்லியூர் சஞ்சீவிமலை பெருமாள் கோவில்
- Kumbabhishekam
தோகைமலை, செப்.14: தோகைமலை அருகே கீழவெளியூர் சஞ்சீவிமலையில் உள்ள விஷ்ணுபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழவெளியூர் தென்புறம் உள்ள சஞ்சீவிமலையில் விஷ்ணுபெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் முடிவு செய்து, காவிரியில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டு யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து விக்னேஷ்வரர் பூஜை, நாடிசந்தானம், கோ பூஜை, கடம் பறப்பாடுகள் நடைபெற்றது.
பின்னர் விஷ்ணுபெருமாள் கோயில் கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில், அறங்காவலர் மற்றும் முக்கியஸ்தர் பாஸ்கர், மருத்துவர் கலையரசன் உள்பட விழா கமிட்டியாளர்கள், முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள், இளைஞர் அமைப்பினர் உள்பட திரலான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
The post கீழவெளியூர் சஞ்சீவிமலை பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.
