×

மேற்குவங்க முதல்வர் மம்தா மருமகனிடம் 9 மணி நேரம் விசாரணை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பள்ளிகளில் வேலை வழங்கியதில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பியுமான அபிஷேக் பானர்ஜியை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இதை ஏற்று கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு அபிஷேக் ஆஜரானார். அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அதன்பின் அபிஷேக் பானர்ஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து அவரது வீட்டிற்கு புறப்பட்டார்.

The post மேற்குவங்க முதல்வர் மம்தா மருமகனிடம் 9 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : West ,CM ,Mamta ,Kolkata ,Enforcement Department ,West Bengal ,Dinakaran ,
× RELATED திமுக கூட்டணி வெற்றி பெற அயராது...