×

அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல் சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்

சென்னை: ‘‘தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்’’ என எடப்பாடி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழக உளவுத் துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதால், குற்றங்கள் பெருகி உள்ளது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரிப்பது எப்படி என்பதிலும், சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் மீது குற்றச்சாட்டுக்களைப் புனைவதிலும் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. இரு நாட்களுக்கு முன்பு, சென்னை பனையூரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்த காவல் துறை, போக்குவரத்து நெரிசலை சீர்செய்தல் குறித்தும், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் குறித்தும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் பேசி, சரியாக முன் திட்டமிடாத காரணத்தினால், கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது, காவல் துறையினுடைய தோல்வியைக் காட்டுகிறது. இனியாவது தமிழகக் காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல் சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Edapadi ,Chennai ,Tamil Nadu ,Edappadi ,AIADMK ,Dinakaran ,
× RELATED கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி...