×

காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 5,414 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: ‘‘காற்றாலை மூலம் அதிகபட்சமாக 5,414 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது’’ என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அனல் மின் நிலையம், அணு மின் நிலையம், நீர் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்கிறது. இது போன்ற மின் உற்பத்தி நிலையங்களை தவிர பருவ காலங்களில் காற்றாலை மற்றும் சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் காற்றாலை மூலம் மிக அதிகபட்சமாக கடந்த செப்.10ம் தேதி 5,414 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: காற்றாலைகளில் மின் உற்பத்தி தற்போது உச்சநிலையில் இருக்கிறது. காற்றாலை மூலம் மிக அதிகபட்சமாக கடந்த செப்.10ம் தேதி 5,414 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 11ம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு 3,794 மெகாவாட், காலை 7.50 மணிக்கு 4,314 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்தது. இவை தவிர சோலார் மூலம் கடந்த 10ம் தேதி 4, 672 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலை மற்றும் சோலார் மூலம் சராசரியாக 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல் மின்நிலையங்களில் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த 11ம் தேதி அனல் மின்நிலையங்களில் உற்பத்தி பாதியாக அதாவது 1,599 மெகாவாட் என்ற அளவில் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் அன்றைய தினம மின் தேவை 15,331 மெகாவாட் ஆக இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 5,414 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி: மின்வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Wind Farms ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...