×

காவிரி சிக்கலில் நமது உரிமையை நிலைநாட்ட அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று அறிவித்து விட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, அந்த முடிவின் பின்னணியில் ஒட்டுமொத்த கர்நாடகமும் ஒன்றாக இருக்கிறது என்பதை உலகிற்கு காட்டுவதற்காக இன்றைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இது கடந்த 3 வாரத்தில் கூட்டப்பட்டிருக்கும் 2வது அனைத்துக் கட்சிக் கூட்டமாகும். நீரைப் பெறுவதற்காக தமிழக அரசு மிகவும் தீவிரமாக செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும். காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன என்பதை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரிவிக்க வேண்டிய கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, அதற்காகவும், காவிரி சிக்கலில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post காவிரி சிக்கலில் நமது உரிமையை நிலைநாட்ட அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Ramadoss' ,CHENNAI ,PAMC ,Ramadoss ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்