×

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 56 பேர் பலி

ஹனோய்: வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 56 பேர் உடல் கருகி பலியாகினர். வியட்நாம் தலைநகர் ஹானோயில் 9 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன.

இங்குள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ வேகமாக குடியிருப்புகளுக்கு பரவியது. இதைகண்டு குடியிருப்புவாசிகள் அலறியடித்து கொண்டு வௌியேறினர். ஆனால் வேகமாக பரவிய தீயில் 56 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 56 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Vietnam ,HANOI ,
× RELATED நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி