×

ஒடுகத்தூர் அடுத்த மேல்பள்ளிபட்டு பகுதியில் 135 மது பாட்டில்களுடன் கையும் களவுமாக பிடிபட்ட பெண்

*ரகசிய தகவலில் போலீசார் அதிரடி

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அடுத்த மேல்பள்ளிபட்டு பகுதியில் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக நேற்று வேப்பங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் நாகராஜன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார், சிறப்பு தனிப்பிரிவு எஸ்ஐ பார்த்திபன் ஆகியோர் கொண்ட தலைமையிலான போலீசார் அப்பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒரு வீட்டில் பெண் ஒருவர் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்று கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே கிராமத்தை சேர்ந்த புஷ்பா(50), என்பதும், இவர் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 135 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், இதுகுறித்து, வழக்குப்பதிந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே சட்டவிரோதமாக வீட்டில் அரசு மது பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்ற பெண்ணிடம் மது பாட்டில்களை பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஒடுகத்தூர் அடுத்த மேல்பள்ளிபட்டு பகுதியில் 135 மது பாட்டில்களுடன் கையும் களவுமாக பிடிபட்ட பெண் appeared first on Dinakaran.

Tags : Melpallipatu ,Odugathur ,Dinakaran ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...