×

அங்காடிச் செயலி!

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கணினி பயிற்சி மூலம் பொருளாதார மேம்பாடு குறித்த மூன்று நாள் பயிலரங்கு சென்னை மேடவாக்கத்தில் உள்ள நியூ பிரின்ஸ் பவானி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் தகவல்தொடர்புத்துறை இறுதியாண்டு மாணவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, சுய உதவிக் குழுத் தொழில் முனைவோருக்காக உருவாக்கிய அங்காடி’ என்ற செயலியை வெளியிட்டார். இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உறுப்பினர்கள் மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகள், அவர்களின் சேவைகள், மேலும் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் குறித்த தகவல்கள், தொழில் துவங்க வங்கிகள் அளிக்கும் கடன்கள், பண உதவிகள் என அனைத்துமாக‘அங்காடி’ செயலி உதவும்.

The post அங்காடிச் செயலி! appeared first on Dinakaran.

Tags : Medavakkam, Chennai ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்