×

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

*வேப்பிலையுடன் பத்து மிளகு, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து அரைத்துப் பெரியவர்களுக்குச் சுண்டைக்காய் அளவும், சிறியவர்களுக்கு அதில் கால் பாகமும் காலை, மாலை இருவேளையும் இரண்டு நாளைக்குக் கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் உடனே மடிந்துவிடும்.
*சூப்பில் போட பிரெட் துண்டுகள் இல்லாதபோது, ஜவ்வரிசி வடாம் பொரித்து உடைத்து துண்டுகளாக்கி சூப்பில் சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.
*கையில் தீப்புண் ஏற்பட்டால் கோதுமை மாவினுள் கையை வைத்துக் கொண்டு சிறிது நேரம் இருந்தால், புண் சரியாகும்.
*எலுமிச்சம்பழத்தை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பிறகு சாறு பிழிந்தால் அதிகப்படியான சாறு கிடைக்கும்.
*பிளாஸ்கில் சூடான திரவத்தை ஊற்றும் ேபாது பிளாஸ்கை சாய்வாக வைத்து ஊற்ற வேண்டும்.
*கைதுடைக்கும் துணி, சமையல் அறையில் பயன்படுத்தும் துணி ஆகியவற்றை ஷாம்பு கலந்து நீரில் அலசினால் துணி பளிச்சென்று இருக்கும்.
*சாம்பார் வைக்கும் போது இறக்கும் தருவாயில் வெந்தயமும், பெருங்காயமும் வறுத்து பொடி செய்து போட்டு அத்துடன் சிறிது கசகசாவையும் சேர்த்து பொடி செய்து போட்டால் சாம்பார் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.
*உளுந்தம் பருப்பை ஊறவைத்து நைஸாக அரைக்க வேண்டும். உளுந்தம் பருப்பை அரைத்து தோண்டும் சமயத்தில் அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து வடை செய்தால் வடை நன்றாக இருக்கும்.உளுந்தம் பருப்பை ஊறவைத்து உப்பு சேர்த்து நைசாக இல்லாமல் ஒன்றிரண்டாக அரைத்து அதில் சிறிதளவு பச்சைமிளகாய், கடுகை சேர்த்து சிறு சிறு உருண்டையாக்கி வெயிலில் காயவைத்து எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடலாம்.
*தோசை மாவில் உருளைக் கிழங்கை வேகவைத்து அரைத்து தோசை ஊற்றினால் தோசை நன்றாக வரும். சுவையாகவும் இருக்கும்.
– கவிதா சரவணன்

The post குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்! appeared first on Dinakaran.

Tags : Kutty Kutty Home ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு