×

வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர் உயிரிழப்பு..!!

வியட்நாம்: வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஹனோயின் தான் சுவான் மத்திய மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவு 11:30 மணியளவில் கட்டிடத்தின் பார்க்கிங் தளத்தில் தீ பற்றியெரிய தொடங்கியது. குடியிருப்புப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களால் நிரம்பி காணப்படும் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

குடியிருப்பாளர்கள் பலர் வீட்டில் இருந்தபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 45 வீடுகள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். குறுகிய பாதையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள நிலையில் இன்று காலையில் தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் மீட்புப் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்த விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 54 பேரில் 50பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vietnam ,Hanoi ,Dinakaran ,
× RELATED நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி