×

செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் கல்வி சீர்வரிசை வழங்கல்

தஞ்சாவூர், செப். 13: தஞ்சாவூர் மேம்பாலம் அருகே இயங்கிவரும் செவித்திறன் குறைபாடுடையோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் அறக்கட்டளை சார்பில், ஆசிரியர்களை கவுரவித்து, பள்ளிக்கு கல்வி சீராக ரூ.2 லட்சம் மதிப்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் சக்கரவர்த்தி, கல்வி உபகரணங்களை அறக்கட்டளை குழுவினரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். முன்னதாக செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவிகள் தங்களது ஆசிரியர்கள், கல்வி உபகரணங்களை வழங்கிய அறக்கட்டளை நிர்வாகத்தினருக்கு மலர்கள், சந்தனம், குங்குமம், இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை, சைகை மொழியில் தெரிவித்தனர்.

தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் அங்கு பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் கல்வி சீர்வரிசை வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Government Higher Secondary School for the Hearing Impaired ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...