×

மனிதர்களை கொண்டு செப்டிக் டேங்க் சுத்தம் செய்தால் நடவடிக்கை

இளம்பிள்ளை, செப்.13: இடங்கணசாலை நகராட்சி ஆணையாளர் சேம்கிங்ஸ்டன் (பொ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இடங்கணசாலை நகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய நகராட்சி வாகனம் மற்றும் நகராட்சியில் உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு 14420 என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் தெரிவிக்கலாம்.

மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013 விதிகள் 7ன் படி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனிதர்களை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தக்கூடாது. மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ₹2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும், 2வது முறையாக தவறு செய்தால் 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது சிறை தண்டனையும், அபராதமும் சேர்த்து விதிக்கவும் வாய்ப்புள்ளது. அதோடு கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் தொழிலாளரின் குடுப்பத்திற்கு சம்பந்தப்பபட்ட உரிமையாளர் ₹10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 14420ஐ பயன்படுத்தி நகராட்சி வாகனம் அல்லது உரிமை பெற்ற வாகனங்கள் மூலம் மட்டுமே பயன்படுத்தி சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

The post மனிதர்களை கொண்டு செப்டிக் டேங்க் சுத்தம் செய்தால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Yumupillai ,Itanganasalai ,Municipal Commissioner ,Semkingston ,P ,Dinakaran ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் வழங்கல்