×

தமிழிசைக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தி.மு.க. அரசை கொச்சைப்படுத்துவதா?

சென்னை: பாரதியாரின் பெருமையை மட்டுமல்ல அனைத்து கவிஞர்களின் புகழையும் பரப்பி வரும் திமுக அரசை கொச்சைப்படுத்துவதா என்று தமிழிசைக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடி மீது தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை வம்புக்கு இழுத்து, பாரதியாருக்கு மரியாதை செலுத்த தமிழ்நாடு முதல்வருக்கு நேரமில்லையா என்று கேட்டிருக்கிறார். பாரதியாருக்குப் பெருமை சேர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

அவர் வழியில் நின்று, பாரதியாரைப் பெருமைப்படுத்தும் பல்வேறு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கும் சகோதரி, தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக, பாரதியாரின் பெருமையை மட்டுமல்ல அனைத்துக் கவிஞர்களின் புகழையும் பரப்பி வரும் திமுக அரசைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தெலங்கானாவிலிருந்து தமிழ்நாடு வந்தவுடன், குறைந்தபட்சம் கடந்தகால பத்திரிக்கைச் செய்திகளைப் படித்து விட்டு திமுக அரசைக் குறைகூறுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழிசைக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தி.மு.க. அரசை கொச்சைப்படுத்துவதா? appeared first on Dinakaran.

Tags : TB ,S.S. Bharati ,Chennai ,R.R. ,Tamil Nadu ,Dizhagam ,Bhadiyas ,TR S.S. Bharati ,
× RELATED இராஜீவ் காந்தி அரசு பொது...