×

பிறழ்சாட்சியம் அளித்த காவலர்களிடம் துறை ரீதியாக விசாரிக்க நடவடிக்கை

புதுச்சேரி, செப். 13: காலாப்பட்டு கலவர வழக்கில் பிறழ்சாட்சியம் அளித்த காவலர்களிடம் துறைரீதியான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் தனியார் ரசாயன தொழிற்சாலை விரிவாக்கம் செய்வது தொடர்பாக கடந்த 2018ல் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. ஒரு தரப்பு ஆதரவாகவும், மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்படவே எதிர்தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது பேராாட்டக்குழுவினர் கற்கள் வீசியதால் எஸ்ஐ புனிதராஜ் கால் முறிந்தது. 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுதொடர்பாக காலாப்பட்டு போலீசார், கொலை செய்யப்பட்ட காங். பிரமுகர் ஜோசப், சந்திரசேகர் உள்பட 53 பேர் மீது 9 பிரிவுகளில் புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜூ வாதாடினார். அப்போது வழக்கு விசாரணையில் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 2 எஸ்ஐக்கள் தவிர 5 போலீசார் பிறழ் சாட்சியாக மாறினர். இதனால் 53 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணையில் பிறழ்சாட்சியாக மாறி தற்போது பணியில் உள்ள ஏட்டு வேலவன், காவலர்கள் வினோத், சக்திவேல்முருகன், வினோத்குமார் ஆகியோர் மீது சீனியர் எஸ்பி துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள நீதிபதி செல்வநாதன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post பிறழ்சாட்சியம் அளித்த காவலர்களிடம் துறை ரீதியாக விசாரிக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Kalapat ,Dinakaran ,
× RELATED தூண்டில் வளைவு அமைக்கக்கோரி...