- மேயர்
- மகேஷ்
- திமுக மாவட்டம்
- நாகர்கோவில்
- முதல் அமைச்சர்
- குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க
- உதவி மேயர்
- திமுக
- தின மலர்
நாகர்கோவில், செப். 13: குமரி கிழக்கு மாவட்ட திமுக அயலக அணி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒழுகினசேரியில் உள்ள திமுக அலுவலகத்தில் நடந்தது. நிதழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் முகமது பஷீர் தலைமை வகித்தார். அயலக அணி தலைவர் சுஜின் ஜெகேஷ், துணைத் தலைவர் செல்வன், துணை அமைப்பாளர்கள் ரபீக், வி.என்.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் கலந்து கொண்டு வெளிநாட்டில் வேலை பார்த்து மறைந்த திமுக நிர்வாகிகள் சத்யராஜ், டேனியல் ராஜா ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கினார்.
மேலும் தடிகாரன்கோணம் ஊராட்சியை சேர்ந்த மாவட்ட பிரதிநிதி ஹிட்லர் சிங்கின் மகன் துபாயில் வேலை பார்த்து நோய்வாய்ப்பட்டு தாயகம் திரும்பினார். அவருக்கு ரூ.10 ஆயிரம், திமுக நிர்வாகி மோகனின் மகன் அஜெய்ரீகன் என்பவருக்கு அயல் நாட்டில் வேலை வாய்ப்பிற்கான நியமன ஆணையையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் சரவணன், பகுதி செயலாளர் ஷேக்மீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாற்றுகட்சியினர் மாவட்ட செயலாளர் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
The post திமுக அயலக அணி சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி மேயர் மகேஷ் வழங்கினார் appeared first on Dinakaran.
