×

புதுவையில் இருந்து சென்னைக்கு பஸ்கள் இல்லை பயணிகள் மறியல்

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இசிஆர் மற்றும் பைபாஸ் வழியாக 15 நிமிடத்துக்கு ஒருமுறை பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 11.30 மணி வரை புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு எந்த பஸ்களும் வரவில்லை. பிஆர்டிசி மட்டுமின்றி தமிழக அரசு, விரைவு பேருந்துகளும் வராத நிலையில் வெகுநேரம் காத்திருந்த 30க்கு மேற்பட்ட பயணிகள், நள்ளிரவு 11.45 மணியளவில் பஸ் நிலையம் எதிரே மறைமலையடிகள் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து உருளையன்பேட்டை போலீசார் வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறிது நேரத்தில் கடலூரில் இருந்து அடுத்தடுத்து சென்னைக்கு தமிழக அரசு பஸ்கள் வந்ததையடுத்து பயணிகள் அதில் புறப்பட்டு சென்றனர்.

The post புதுவையில் இருந்து சென்னைக்கு பஸ்கள் இல்லை பயணிகள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Puduwai ,Chennai ,Puducherry ,ECR ,Bypass ,Dinakaran ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...