×

சில்லி பாயின்ட்…

* ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று களமிறங்கிய இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 4-6, 2-6 என்ற நேர் செட்களில் உள்ளூர் வீராங்கனை மவுயுகா உச்சிமாவிடம் தோற்று வெளியேறினார்.
* பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித், கோஹ்லி 2வது விக்கெட்டுக்கு 2 ரன் மட்டுமே சேர்த்தனர். அதன் மூலம் இருவரும் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர். அதாவது இந்த இணை 86 இன்னிங்ஸ்களில் விரைவாக 5 ஆயிரம் ரன் குவித்து சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீசின் கார்டன் கிரினீட்ஜ் – டெஸ்மாண்ட் ஹெயின்ஸ் ஜோடியின் சாதனை (97 இன்னிங்ஸ்) முறியடிக்கப்பட்டது. இந்திய வீரர்களை பொறுத்தவரை சச்சின்-கங்குலி, ரோகித்-தவான் ஆகியோர் ஏற்கனவே இந்த மைல்கல்லை எட்டி இருந்தாலும், எடுத்துக் கொண்ட இன்னிங்ஸ் எண்ணிக்கை அதிகம்.
* காயம் காரணமாக அவதிப்படும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் நசீம் ஷா, ஹரிஸ் ராவுப் இருவரும் சிகிச்சைக்காக நாடு திரும்புவதால் ஆசிய கோப்பையில் எஞ்சிய ஆட்டங்களில் விளையாட மாட்டர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் ஷானவாஸ் தஹானி, ஜமான் கான் சேர்க்கப்பட்டுள்ளனர்.
* இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் கென்ட் அணிக்காக அறிமுகமான இந்திய ஸ்பின்னர் யஜ்வேந்திர சாஹல், நாட்டிங்காம்ஷயர் அணிக்கு எதிராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே 29 ஓவரில் 10 மெய்டன் உள்பட, 63 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Ankita ,Japan Open women's tennis series ,Dinakaran ,
× RELATED ஒரு தலைக்காதல் வழக்கு; மாணவியை...