×

தாமரை மாவட்ட தலைவரை பார்த்து ஓட்டம் பிடிக்கும் பெண்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலம்காரர் கொடுத்த கரன்சியை ஏப்பம் விட்ட நிர்வாகி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சேலம்காரர் அணி சார்பில் தூங்காநகரில் சமீபத்தில் இலை கட்சியின் மாநாடு நடந்தது. இதற்காக பணத்தை வாரி இறைச்சாராம். ஆனால், செலவிட்ட கரன்சியும் மாநாட்டில் கூடிய தலைகளின் எண்ணிக்கையை கூட்டி கழித்து பார்த்த சேலம்காரருக்கு தூக்கிவாரி போட்டதாம். ஒருவருக்கு 2 பெரிய கரன்சி நோட்டை நீட்டியிருந்தால் கூட பெரிய அளவில் கூட்டம் குவிந்து இருக்குமாம்… இவ்வளவு குறைவாக வர என்ன காரணம்… எந்த மாவட்டம் கரன்சியை வாங்கி தன் சொந்த நலனுக்கு பதுக்கியது என்ற விசாரணையை தொடங்கினாராம். அதில் பல மாவட்டங்கள் சிக்கினாலும், லேட்டஸ்ட்டாக மலைக்கோட்டை மத்திய மண்டலத்தில் இருந்து தான் தொண்டர்கள் அதிகமாக வரல. மாஜி எம்பியை நம்பி பெரிய அளவில் மலைகோட்டையில் இருந்து பெரிய கூட்டத்தை அழைத்துவர ஒரு பெரிய தொகையை.. சேலம்காரர் கொடுத்து இருந்தாராம். அவர் நம்பிக்கை கரன்சியை பெரிய அளவில் பதுக்கிவிட்டாராம். சிறிய அளவில் கரன்சியை செலவு செய்து சில கார், சில வேன்களில் மட்டும் ஆட்களை அழைத்து வந்து பல கோடிகளை அமுக்கிட்டதாக சொல்றாங்க. இந்த தகவல் காற்று வாக்கில் மாங்கனி தலைவருக்கு போச்சாம். அப்போதில் இருந்து மலைகோட்டை பிரமுகர் மீது கடும் கோபத்தில் மாங்கனி கட்சி தலைவரு இருக்காராம். ஆனால், மலைகோட்டை மாஜி எம்பி அதை பற்றி கவலைப்படாமல் ஜாலியாக அரசியல் செய்து வருகிறாராம். மலைக்கோட்டை மத்திய மண்டலத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீதும் டென்ஷன்தானாம். இதனால் விரைவில் மாற்றம் வருவது உறுதி என்று தனக்கு வேண்டியவர்களிடம் மாங்கனி தோட்டத்தில் இருந்து தகவல் வந்து கொண்டிருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை கட்சிய பார்த்து பெண்கள் ஓடிய காரணத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைவரு யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாநகர் மாவட்ட தாமரைக்கட்சி தலைவர் மீது, ‘பலான’ புகார்கள் எழுந்திருக்காம். கட்சியில புதிதாக சேருவதாக இருந்தால், அம்சமான, அழகான தேவதைகளோடு வருபவர்களுக்கு உடனே கட்சியில் போஸ்டிங் என்று தாமரை கட்சியின் தலைவர் மாவட்ட தலைவரின் அபத்தமான பேச்சு கட்சியில் சேர வந்த பெண்களை அலற வைச்சுடுச்சாம். கொடுத்த வாக்குறுதியை மாவட்ட தாமரை தலைவர் காப்பாற்றியும் உள்ளாராம். அதாவது, அழகானவர்களை கட்சிக்கு அழைத்து வந்தவங்களுக்கு தாமரை கட்சியில, மாங்கனி மாவட்டத்துல போஸ்டிங் போட்டு கொடுத்துள்ளாராம். சில நாட்களுக்கு முன்னாடி, உஜ்வாலா திட்ட மனுக்கள் பெறும் முகாம் நடந்தபோது இந்த பேச்சுதான் மாங்கனி மாவட்டத்தில் பெரிய பேச்சாக இருந்ததாம். அப்ப, காஸ் சிலிண்டர் வாங்க மனு கொடுக்க வந்த பெண்கள், தாமரை நிர்வாகிகள் பக்கம் தான் இருந்தாங்களாம். இவரின் பேச்சை கேட்ட பெண்கள் கேஸ் ேவண்டாம்… இவங்க சாவகாசமும் வேண்டாம் என்று வரிசையில் இருந்த பெண்கள் விட்டால் போதும் என்று எஸ்கேப் ஆயிட்டாங்களாம். இதுல தாமரை நிர்வாகிகள் சிலரு, எங்க மாவட்ட தலைவரு ‘வுமன்’ அடிமையாக இருந்தால் கட்சி எப்படி மாங்கனி மாவட்டத்தில் வளரும்… இவரு இருந்தால் கரன்சி செலவாகுமே தவிர எம்பி தேர்தலில் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாதுனு பேசினாங்களாம். இவற்றை கவனித்த பெண்கள் நல்ல காலம் முதல்லயே கவனிச்சதால, பித்தரின் பிடியில் இருந்து தப்பினோம்… இந்த தகவல் கட்சி தலைவர் காதில் விழுந்து அவரை மாற்றும் முடிவில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சொட்டு நீர் பாசன இலவச பைப்புக்கு, ஆட்களை நியமித்து வசூல் செய்வது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டம் அணையான வட்டத்தில் அக்ரி ஆபீஸ் இயங்கி வருகிறது. இந்த அக்ரி, ஆர்ட்டிகல்சர் துறை மூலமாக விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் திட்டத்தில் பைப் லைன் அமைக்க இலவசமாக பைப் வழங்கப்படுது. இதனை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனமும் அலுவலர்களும் நேரடியாக களம் இறங்காமல் அந்தப் பகுதியிலேயே சில ஏஜென்ட்களை நியமிச்சு அவர்கள் மூலமாக இந்த திட்டத்தை செயல்படுத்தி விவசாயிங்ககிட்ட வசூல் செய்றாங்க. சம்திங் கொடுக்காத விவசாயிகளை அலைக்கழிக்கறாங்க. இந்த பைப்புகளை வண்டிகள்ல கொண்டு வந்து இறக்குறதுக்கும், ஏற்றுவதற்கும் வாடகை வாங்குறாங்களாம். இப்படி பைப்பை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் ஆயிர கணக்குல செலவு செஞ்சி பைப்புகளை வாங்குறதவிட வெளிடப்படையாகவே வாங்கிக்கலாம்னு விவசாயிங்க புலம்புறாங்களாம். இந்த புலம்பல் ஒடுக்கமான ஏரியாவுலயும் இருக்குதாம்.. பாவம் விவசாயிகளின் வியர்வை ஒடுக்கப்பட்ட அந்த ஏரியாவில் ஒலிக்குதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நெல்லையில் காக்கிகள் ஏன் பதற்றமாக இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அல்வா மாவட்டமும் சரி, மாநகரமும் சரி எப்போதும் பரபரப்பாவும், பதற்றமாகவும் இருக்கும். அது மட்டுமல்லாது தென் மாவட்டங்களுக்கு முக்கிய சந்திப்பாக நெல்லை இருப்பதால் அதிகாரிகள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் நெல்லை வந்து பிற நகரங்களுக்கு பயணிப்பது வழக்கம். இங்கு போலீஸ் கமிஷனர் பதவி என்பது மிக முக்கியமான பதவியாகும். இங்கு மாநகர போலீஸ் கமிஷனராக இருந்தவரை, ஒட்டு கேட்கும் துறையின் அதிகாரியாக மாற்றிட்டாங்களாம். அதற்கு முன்பே கிழக்கு பகுதி துணை போலீஸ் கமிஷனராக இருந்த சர்க்கரை பெயரை கொண்டவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். துணை போலீஸ் கமிஷனர் பணியிடம் 3 மாதத்துக்கும் மேலாக காலியாக இருக்கும் நிலையில், மாநகர போலீஸ் கமிஷனர் பதவி ஒரு மாதமா காலியாக இருக்காம். சமீபத்தில் பேரவை உறுதிமொழிக் குழு வந்த போது கூட மாநகர காக்கிகளுக்கு உட்பட்ட ஆயுதப்படை கிட்டங்கிக்கு போனாங்களாம். அப்போது குழுவிடம் விளக்க காக்கி உயரதிகாரிகள் யாரும் இல்லையாம். அதை பதிவு செய்துள்ளதாம் உறுதி மொழி குழு… இந்த ஊரின் பெரிய அதிகாரியானவர் நாலு மாவட்டத்துக்கு பொறுப்பானவராம்… டென்ஷன் மிகுந்த மாவட்டத்துக்கு கூடுதல் பொறுப்பாக யாரையும் நியமிக்காமல், நேரடியாக பொறுப்பில் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நாலு மாவட்ட காக்கிகள் நினைத்து வர்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post தாமரை மாவட்ட தலைவரை பார்த்து ஓட்டம் பிடிக்கும் பெண்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Lotus ,Salemkar ,Peter ,Dunanganagar ,Salemgarh ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...